ஓடிவிளையாடு நீ -
ஓய்ந்திருக்காது விளையாடு
ஒருநாள்
முடிந்திடும் மூச்சினை யெண்ணாது
துடிதுடிப்பாய்
விளையாடு! துடிதுடிப்பாய் ஆடு!
தூங்கியபின்
ஆட்டமில்லை – எண்ணாது ஆடு!
கனவுகள்
நிஜமாகுமென நினைத் தாடுகிறாய்!
கண்டவரையெலாம்
கரண்டையின்கீழ் எடுத்திட
ஊனமனங்கொண்டாடுகிறாய் - நீயாடு நீயாடு!
உலகமுந்தன்
பாடைதூக்கிடும் நாளெண்ணாதாடு!
யானுயர்ந்தவ
னெனநினைந்தே உதைக்கின்றாய்நீ
யாவுமறிந்தவன்
நிலையெண்ணா துதைக்கின்றாய்!
வானும்வசமாகும்
விண்மீனும் கீரிடம்தரிக்கு முனக்கு
வாழ்க்கை – பார் ஏதெனநீ யுணருங்காலே! உதைநீ!
சாதிகளி
லுயர்ந்தவன் நீயென்று உதைக்கின்றாய்!
சாதியென்ன சாதி
உந்தனுக்குள் எங்கேயோகம்?
நீதியை நிலத்தினி
னழித்திட உதைக்கின்றாய்நீ
நிலையிலா வாழ்வின்
முடிவேதென அறியாதுநீ!
ஒற்றைப் பந்தின்
வாழ்வன்னது வாழ்க்கை – அது
ஓய்ந்திடும்வேகமறியாது
உதைத்தாடுகிறாய்!
இற்றைப்பொழுதில்
உந்தனாட்டம் கண்டுசிரித்திட
இருக்கின்ற சாரார்
எண்ணி யாடுகிறாய் –நீயாடு!
இழுத்தடிப்பதில்
தப்பேது உனைப்பந்தாடுவார்தனை!
இழுத்தடிப்பதில்
தப்பேது உனையிகழ்வார்தனை!
வீழ்ந்துமடிந்தாலும்
ஆகும் வீணரை வீழ்த்திடஆடின்
வம்புக்கும்
வீம்புக்குமாடின் நீகண்டதெலாம் பூச்சியமே!
-கலைமகன் பைரூஸ்
இலங்கை
20/08/2010
No comments:
Post a Comment