Saturday, November 17, 2012

ஒரு மரணம் அழுகிறது!




பல்லாயிரம் ஆசைகளைச் சுமந்து
பவனிவந்தேன் பாரில்நான்!
எல்லோரும் செயும் நல்லவையும்
தீயவையும் செய்திருப்பேன்!
என்றாலும்
சுவனத்தில் ஈடேறவே
உலகில் பலசெய்தேன்!
இன்று
எனது உள்ளத்து வேதனைகள்
பற்றி
கடலளவு நான் கத்திக்கத்தி
குரல்ஓயுமட்டும் சொன்னாலும்
யாருக்கும் கேட்கப்போவதில்லை!

எனது மறுவாழ்வு
எப்படியோ என்று
நான் பெருமூச்சு விடுகிறேன்
என்றாலும்
என்னை
மண்ணறைக்குள் வைப்பதில்
எல்லோரும்
குறியாய் இருப்பதை
நான் காண்கிறேன்...
அவர்களுக்கு
என் அவலங்களும் புரிவதில்லை
அவர்கள்பற்றி நான்தெரிவதும்
புரிவதில்லை.

என்னை எப்படிக் குளிப்பாட்டுவது?
என்று ஒருசிலர் பேசுகிறார்கள்....
என் கைகளை எப்படிக்கட்டிவைப்பது?
நீட்டி வைப்பதா?
கட்டிவைப்பதா
என்றும் பேசிக்கொள்கிறார்கள்...
நானோ கட்டுண்டு கிடக்கிறேன்
என்கதி ஏதோ என்றநிலையில் நான்!

நான் நிலத்திலிருந்து
போகப்போவதற்காக
சிலர்
நீலிக் கண்ணீர்வடிப்பது தெரிகிறது....

என் குரல்  ஓய்ந்த்துகேட்டு
சில ஊரவர்,
அவன் அந்த சாதி,
அவன் அந்தப் பிரதேசம்
அவனைப் பார்த்து நமக்கு
என்ன  ஆவதாம்....
என்று முணுமுணுப்பதும்
எனக்குக் கேட்கிறது...

எல்லாவற்றிலும் மேலாக
இப்போது
என்னை மண்ணறையில் வைக்க
என்னோடு அடக்க்க்கூடிய
பாயில்வைத்து
கூட்டில் வைக்கிறார்கள்....
சிலர்.....
ஆம்.... நான் அன்புபரிமாறியவர்கள்
என்னில்  காதல் கொண்டவர்கள்
அழுகிறார்கள்!
சிலர் மண்ணறைவரை!
சிலர் அழுகை ஓயும்வரை!

சிலர் மாறி மாறி எனைச்சுமக்க
ஒருசிலர் இறைதுதி பாடிச்செல்ல
சிலர் மௌனித்துச்செல்கிறார்கள்!
நான் ஒன்றும் புரியாமல்
தலை கால்தெரியாமல் துவள்கிறேன்...

ஆளுக்கு ஆள்
துவேச வார்த்தைகளை
அள்ளித் தள்ளிக்கொண்டுசெல்கிறார்கள்
அடுத்தவன் காதுகளுக்குள் கேட்காமல்....

நான் எனக்குள்  இப்படிச் சொல்கிறேன்...
ஏ!
சாதித்துவம் – பிரதேசவாதம் பார்ப்பவர்களே
ஏ!
குழுவாய் நின்று மாற்றார்க்கு குழிபறிப்பவர்களே
நீங்கள் செய்வது எல்லாம்
நியாயமானது என்று கருதுகிறீர்களா?
உங்கள்
துவேசங்கள்
உங்கள்  ஆணவங்கள்
உங்கள்  அடாவடித்தனங்கள்
நாங்கள்தான் நல்லவர்கள்
நாங்கள்தான் வல்லவர்கள் என்றநிலை
என்னைப்போல் உங்கள் உயிர்க்காற்று
ஓய்ந்த்தும் உங்களுக்கும்தெரியும்!


நான்
மரணத்தைச் சுவைத்தவிட்டேன்
அதன் வலியும் – அதன்நெளிவும்
எனக்குத் தெரியும்
உங்கள்
அறியாமையை நினைத்து
எனக்குள் அழுகிறேன்....
நீங்களும் அழுகிறீர்கள்....
நானோ
கடலளவு கரைகிறேன்....

என் இறைவா!
உத்தம்மான படைப்பாக நீ
எங்களைப் படைத்தாய்
நாங்கள் எங்களை மறந்து
எத்தனை தவறுகள் இழைத்தோம்!
உன்னிடம் அழுதுகேட்கிறேன்....
எல்லோரும் ஒன்றாக வாழ்ந்திட நீ
எண்ணிடு!
சாதித்துவ அரக்கர்களை அழித்திடு!
அப்போது
பிணமாய் உள்ள எம்காதுகளில்
அந்த
முணுமுணுப்புக்கள் எழாது!
உண்மை வழியை
உத்தம வழியை காண்பித்திடு!
எல்லோரும் இன்புற்றிருக்க....
எல்லோரும் இன்பமாய் உன்னருகில்வந்திட.....!
 
------கலைமகன் பைரூஸ்

நன்றி :
இலண்டன் வானொலி

கருத்துரைகள்:


ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா "என்னை எப்படிக் குளிப்பாட்டுவது?
என்று ஒருசிலர் பேசுகிறார்கள்....
என் கைகளை எப்படிக்கட்டிவைப்பது?
நீட்டி வைப்பதா?
கட்டிவைப்பதா
என்றும் பேசிக்கொள்கிறார்கள்...
நானோ கட்டுண்டு கிடக்கிறேன்
என்கதி ஏதோ என்றநிலையில் நான்!..."

****** "ஒரு மரணம் அழுகிறது" அற்புதமான ஒரு அனுபவம்.. இதனை ஒரு உரருவகக் கவிதை என்று சொல்லாமா?? வாழ்த்துக்கள்!!
Ko Maalikal · 3 mutual friends
கடவுளைப் படைத்த மனிதன்,
மௌனமாகவல்ல,
மரணமாக அழ வேண்டியதுதான்.
November 14 at 10:43pm
பைஸால் இஸ்மாயில் கவி வரி அல்ல இது மனிதனின் இறுதி வரி நன்றி மக்கள் நண்பன் ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா

மச்சானின் இறப்பு
.....மாபெரும் போதனை
அச்சாகப் பதிந்து
..... அச்சமாய் ஆனதே
 
முடிவாகும் நாளில்
....முடிவைக் கண்டேனே
முடிவாக நானே
.....முடிவு செய்தேனே
 
கலிமாவைச் சொல்லி
.....கடைசி மூச்சுபோக
சலியாமல் நாவும்
....சதாவும் ஓதவேண்டும்
 
அசைவுகள் எல்லாம்
.....ஆன்மாவில் அடங்கும்
அசைவிலாத் தோற்றம்
....அங்கேதான் கிடக்கும்
 
அகத்தின் ஒளியே
....அழகாய் மிளிர
முகத்தின் சிரிப்பில்
.....முழுதாய் உணர்ந்தேன்
 
ஓடி உழைப்பதும்
....ஓரதிர்வில் ஓயும்
ஆடி அடங்கிடும்
...ஆறடியில் சாயும்

மரணம் பயமன்று
...மறுமையின் பயணமென்று
வரணும் விசுவாசம்
....வளரணும் சுயமுயற்சி

நன்மைகள் செய்தாலே
.....நல்லவர்கள் வழுத்தும்
தன்மையில் கைகூடும்
...தன்னிறுதிப் பயணம்

அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
kalaamkathir.blogspot.com
‎"வலைப்பூவில் உங்கள் வருகைப் பதிவு நிலைப்பெற்ற நட்பின் நிகழ்வு."
nitharsanam intha kavithaiyinai pdikkum pothu naan eluthiya oru kavithai ean ninaivuku varukirathu ithayam iruki kankal pthingki edukalkalil ne sappaniyakum pozuthukalil vedo power konda vengkai eana un nadiththudippu uraikirathe......
என்ன சொல்வது என்றே புரியவில்லை சகோதரா..அருமையான படைப்பு. எல்லோர் மனதிலும் மரண பயத்தை ஏற்படுத்தும் உங்கள் வரிகள்... நமக்கு நிகழப்போகும் நிகழ்வை எல்லோருக்கும் புரியும் விதமாக அருமையாக கொண்டு வந்தீர்கள்....வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்...
Kandar Selvarathnam
Life is precious. Breath gives you life & when it deserts us we are dead bodies. Consciousness gone for good. Learn the miracle of breath and reach almighty through Dhyanam (spiritual Knowledge practice) then only u can avoid rebirth onthis planet again and again.
வாழ்வியல் உன்னதங்கள்,தவறுகளையெல்லாம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
மரணத்தைஎப்படி அழகாக பாடியுள்ளார்.வாழ்க்கையின்தரிசனத்தின் இறுதி
படியில்நின்று பாடியுள்ளார்.இறந்தபின் மனிதர்கள் எல்லோரையும்இரட்சகர்கள்
என்றே பேசுகின்றோம்.எனவே குழுநிலைவாதம்,கழுத்தறுப்பு யாவையும் மறந்து
விடுகிறோம்.மானிடம் சிறப்பாக வாழவேண்டும்.குரோதமில்லாது இருக்க
வேண்டும் என்பதையும் சொல்லிச்செல்கிறது.
Pious Jesuthas
unmayai eppadium kura mudiuma??? super
superb valthukal sir....
Vaasiththuvittu satru mauniyaaka irunthu yosiththen pala unmaikal pala athangangal unmaithaan anaiththu uyirkalum santhithe akavendiya oru anupavam manathai thottuvittathu athai thantha vadivamum mika arumai vaalthtgukkal



No comments:

Post a Comment